சுதந்திரதினத்தில் மரநடுகை நிகழ்வு

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04.02.2024 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையினால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.

 

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல்

மாந்தைமேற்கு பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்குரிய கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று மாந்தைமேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. அந்தோனிமுத்து டென்சில் பெர்னாந்து அவர்களின் தலைமையில் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2023 இற்கு அமைவாக இந்த நிகழ்வானது மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார், அதனைத்தொடர்ந்து மாந்தைமேற்கு பிரதேச சபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் அரச சேவை உறுதியுரையேற்று சத்தியப் பிரமாணம் செய்தனர்.
அத்துடன் செயலாளரினால் தற்போதைய சவால்கள் வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அவற்றை அடைவதற்குரிய அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்க உரை ஆற்றப்பட்டது

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

2023ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி வாரம் போன்றவற்றில் பரிசில் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேசசபையில் நடைபெற்றது.

கால்வாய் சீர்திருத்தம்

பெரியமடு மேற்கு கிராமசேவகர் பிரிவில் கனழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ள நிலமையினை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாந்தை மேற்கு பிரதேசசபையினால் நீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவாறு சீர் செய்யப்பட்டது

எமது சபையில் சூரிய மின்கலம் பொருத்துதல்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஊடாக Solar Panel பொருத்தும் நடவடிக்கை மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்

மாந்தை மேற்கு பிரதேச சபையில் அலுவலர்களுக்கான மருத்துவ முகாம் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

சனசமூக நிலையங்களுக்கிடையிலான துடுப்பாட்டம்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு 27.10.2023 அன்று இடம்பெற்ற சனசமூக நிலையங்களுக்கிடையிலான துடுப்பாட்டம் ,கால்பந்து போட்டிகளின் பதிவுகள்.

சிரமதான நிகழ்வு

12.10.2023 அன்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழ் “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்” என்ற தொனிப்பொருளில் வாமதேவபுரம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.