உள்ளூர் உற்பத்திகளை farmtogate என்ற இணையத்தில் பதிவு செய்தல்

மாந்தை மேற்கு பிரதேச சபை  எல்லைக்குட்பட்ட சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் மக்களுக்காக ஒரு சிறந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் வாடகைக்கு விடப்படும் விடயங்கள், உங்களால் வழங்கப்படும் சேவைகளை farmtogate என்ற இணையதளத்தின் மூலம் இலவசமான முறையில் பதிவு செய்து வாடிக்கையாளருடன் இணைந்து கொள்ள முடியும். இன்றே இணைந்திடுங்கள்.
எமது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் உங்கள் சுயதொழில் தொடர்பான விபரங்களை வழங்கவும்.
தொடர்புகளுக்கு – 0232051854

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டி செயலமர்வு

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டி செயலமர்வு மாவட்ட செயலகம் மற்றும் அடம்பன் மடு பிரதேச செயலகங்களுடன் இணைந்து மாந்தை மேற்கு பிரதேச சபையின் அனுசரனையுடன்  26.06.2024 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு  மாந்தை மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலவச நூலக அங்கத்துவம் வழங்கல்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மாணவர்கள் உங்களின் கல்விக்கு உகந்ததாக எமது சபையின் இலவச நூலக அங்கத்துவ விண்ணப்பம் வழங்கப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை எமது நூலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்

வீதி விபத்துக்களை தடுக்கும் செயற்திட்டம்

அண்மைக்காலமாக ஏற்படும் வீதி விபத்துகளை தடுக்கும் முகமாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் அனுசரனையுடன் அடம்பன் போக்குவரத்து பொலிசாரின் வழிகாட்டலின் கீழ் அடம்பன் கடைத்தொகுதிகளில் முதற்கட்டமாக வீதி சமிக்ஞைகள் பொருத்தப்பட்டு ஒற்றை நாள் இரட்டை நாட்களில் வாகனங்கள் ஒரு பக்கமாக நிறுத்துவதற்கான வழிகாட்டல் ஆலேசனை வழங்கப்படுகிறது.
இது 08/05/2024ம் திகதி தொடக்கம் 14/05/2024ம் திகதி வரைக்கும் பரீட்சார்த்த நடைமுறையாகவும் 15/05/2024ம் திகதி தொடக்கம் தவறுதலாக வாகனம் நிறுத்துவோருக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்

LDSP திட்டத்தின் கீழ் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட Gully bowser மூலம் மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவிற்கான சேவை இன்றைய தினம் (08.05.2024) ஆரம்பிக்கப்பட்டது

சிறுவர் சந்தை

இன்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தாமரைக்குளம் முன்பள்ளியில் சிறுவர் சந்தை நடைபெற்றது. இந்த சந்தையினை மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் இஃப்த்தார் நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச சபையில் 04.04.2024 அன்று   இஃப்த்தார் நிகழ்வு மாலை 5.45 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது

சேதனப்பசளை விநியோகம்

மாந்தை மேற்கு பிரதேச சபையில் தயாரிக்கப்பட்ட சேதனப்பசளை ஒரு கிலோ 20 ரூபா வீதம் வழங்கப்பட்டது. தேவையானவர்கள் மாந்தை மேற்கு பிரதேச சபையில் பெற்றுக்கொள்ளலாம்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பகிரங்க ஏல விற்பனை

மாந்தை மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பகிரங்க ஏல விற்பனை எதிர்வரும் 26.03.2024 அன்று காலை 10.30 மணிக்கு பிரதான அலுவலகத்தில் நடைபெறும்.

CamScanner 03 14 2024 11.48

சபைக்கான இணையதள வெளியீட்டு நிகழ்வு

வட மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் நெறிப்படுத்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்காக உருவாக்கப்பட்ட இணையத்தளங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தலைமைச் செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் 01.03.2024 அன்று நடைபெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளம் www.manthaiwest.ps.gov.lk வட மாகாண கெளரவ ஆளுநர் அவர்களினால் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது