சபை வரலாறு

எமது சபையானது கருவறை முதல் கல்லறை வரை என்னும் தொனிப்பொருளுக்கிணங்க மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. பிரதேச சபையானது அதன் பிரதேசத்தில் பகிரங்க சுகாதார பொது நிருவாக அதிகார சபையாகவும் பிரதான பொதுவழிகள் தவிர்ந்த அனைத்து பொதுவழிகளினதும் தொடர்புகளினதும் பொது நிருவாக அதிகார சபையாகவும் செயற்பட்டு வருகின்றது. சபையின் ஆளுகைப் பிரதேசம் மாந்தை மேற்கு பிரதேச சபையானது, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்தில், 47 கிராம உத்தியோகத்தர் பிரிவினை உள்ளடக்கிய 1183.38 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக்கொண்ட பிரதேசமாகும். அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லை மற்றும் மடு பிரதேச செயலக பிரிவு ஆகியனவற்றினை உள்ளடக்கி மாந்தை மேற்கு பிரதேச சபையின் நிர்வாக எல்லையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

எமது சபையின் எல்லைகள் 

05_Mannar_ManthaiWestPS_page-0001

வடக்கு – கிளிநொச்சி மாவட்டம் 

கிழக்கு – முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் 

தெற்கு- நானாட்டான் பிரதேச செயலக பிரிவு

மேற்கு – மன்னார் பிரதேச சபை மற்றும் கடல்

 

எமது சபையானது 1183.38 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணமுடைய 11 வட்டார பிரிவுகளை கொண்ட 47 கிராமசேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதான 156 கிராமங்களை கொண்டுள்ள பாரிய பிரதேசமாக காணப்படுகின்றது. சபையின் நிர்வாக நோக்கங்களிற்காகவும் மக்கள் சேவையினை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  04 உப அலுவலகப் பிரிவுகளை கொண்டுள்ளது.

 

 

1-அடம்பன் உபஅலுவலகம்                                                                                       

2-இலுப்பைக்கடவை உபஅலுவலகம்                                                                              

3-விடத்தல்தீவு உப அலுவலகம்                                                                                     

4-மடு உபஅலுவலகம்

 

மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சந்தைகள் 

1- அடம்பன் சந்தை 

2- இலுப்பைக்கடவை சந்தை 

3- விடத்தல்தீவு சந்தை 

4- பெரியமடு சந்தை 

5- பெரியபண்டிவிரிச்சான் சந்தை 

6- வெள்ளாங்குளம் சந்தை 

7- 16ம் வீட்டு சந்தி சந்தை 

8- ஆண்டான்குளம் பொதுச்சந்தை 

9- இரணை இலுப்பைக்குளம் சந்தை

மாந்தை மேற்கு பிரதேச சபை நூலகங்கள் 

1-அடம்பன் பொது நூலகம் 

2- விடத்தல்தீவு பொது நூலகம் 

3- இலுப்பைக்கடவை பொது நூலகம் 

4- மடு பொது நூலகம் 

 

 

மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆயுர்வேத வைத்தியசாலை 

1-காத்தான் குளம் ஆயுர்வேத வைத்தியசாலை 

மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்பள்ளி 

1-தாமரைக்குளம் முன்பள்ளி 

மாந்தை மேற்கு பிரதேச சபையின் சனசமூக நிலையங்கள் 

சனசமூக நிலையங்களின் பெயர் கிராம அலுவலகர் பிரிவு வட்டாரம்
Arafath Community CenterPeriyamadhu EastPeriyamadu
Jesu Community CenterKaththankulamVaddakkandal
Vidaththalthevu West Community CenterVidathalthevu WestVidathalthevu
Periyamadhu Center Community CenterPeriyamadhuWestPeriyamadu
Nedunkandal Community CenterNedunkandalNedunkandal
Valarmathy Community CenterKarukkakulamAdampan
United Community CenterPalaikuliAdampan
Al-Hiqma Community CenterSornapuriAdampan
Chalampan Community CenterChalampanAdkaddiveli
Sri Vevekanathar Community CenterVamathevapuramAdampan
Aandankulam Community CenterAndankulamAdkaddiveli
Vidaththalthevu East Community CenterVidaththalthevu EastVidathalthevu
Zahira Community CenterMinukkanNedunkandal
Kalliyadi Community CenterKalliyadiIlupaikkadawai
St.Josepvaz Community CenterThevanpiddyVellankulam
Marumalarchi Community CenterSavirikulamIlupaikkadawai
PasapParavaikal Community CenterMoonrampittyVellankulam
Uthayam Community CenterKayanagarPeriyamadu
Vidivelli Community CenterKaththalampittyIlupaikkadawai
St.Anthonys Community CenterAnthoniyarpuramIlupaikkadawai
Illuppaikadavai Community CenterIlluppaikadavaiIlupaikkadawai
Senthamil Community CenterVannakulamAdkaddiveli
Mullai Community CenterSannarVidathalthevu
Veddayamurippu Community CenterVeddayamurippuNedunkandal
Marutham Community CenterEchchalavaikaiPeriyamadu
Christhuarasar Community CenterPeriyapandivirichan EastMadhu
Valluvar Community CenterPeriyapandivirichan WestMadhu
Ilamsudar Community CenterThachanamaruthamadhu, PalampittyMadhu
Vellankulam Community CentreKanesapuram VellankulamVellankulam
Maththiya Community centerPeriyapandiviricha East PoompugarMadhu
Kakkaiyankulam Community CenterKakkaiyankulam EastKakkaiyankulam

இதுமட்டுமல்லாது மாந்தை மேற்கு பிரதேச சபையின் சனத்தொகை தொடர்பாக அவதானிக்கையில்   மொத்த சனத்தொகை 35901 ஆகவும் , குடும்பங்களின் எண்ணிக்கை 11037 ஆகவும்  காணப்படுகின்றது